மத்திய அரசின் ரசாயன தொழிற்சாலை கழிவுகளை பொது வெளியில் தீ வைத்து எரிக்‍கும் அவலம் - மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் சரும நோய்களால் பாதிக்‍கப்படும் மணலி சுற்றுவட்டாரப் பகுதி மக்‍கள்

May 28 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த மணலியில் மத்திய அரசுக்‍கு சொந்தமான ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், பொதுவெளியில் வைத்து எரிக்‍கப்படுவதால், சுற்றுவட்டாரப் பகுதி மக்‍கள், புற்றுநோய், மூச்சு திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்‍கு ஆளாகும் அவலம் இருந்து வருகிறது.

மணலி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் மத்திய அரசுக்‍குச் சொந்தமான உரத் தொழிற்சாலை மற்றும் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், பொது வெளியில் குப்பைகள் போல் கொட்டப்படுகின்றன. குறிப்பாக மணலி புதுநகர் பகுதியில், தனியாருக்‍குச் சொந்தமான சுமார் 80 ஏக்‍கர் காலி இடத்தில் கொட்டப்படும் இந்தக்‍ கழிவுகள், இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்‍கப்படுகின்றன. அப்போது விஷமாக வெளியாகும் புகையால் அப்பகுதி மக்‍கள் கடுமையான மூச்சுத் திணறலுக்‍கு ஆளாகின்றனர். மேலும், புற்றுநோய், கண் எரிச்சல் போன்றவற்றாலும் பாதிக்‍கப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை ஆகிவற்றிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கபபடவில்லை என அப்பகுதி மக்‍கள் வேதனை தெரிவிக்‍கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்‍களின் நலனை கருத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் தாமதிக்‍காமல் இதற்கு தீர்வு காணவேண்டுமென மணலி புதுநகர் மக்‍கள் தமிழக அரசுக்‍கு கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00