மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

May 30 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவப் படிப்புகளுக்‍கான அனைத்திந்திய ஒதுக்‍கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்‍கு 27 சதவீத இடஒதுக்‍கீடு வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை பா.ஜ.க அரசும் தொடர்வது சரியானதல்ல என்றும், அந்தத்தவறைச் சரி செய்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் மத்திய அரசுக்‍கு வலியுறுத்தியுள்ளார்.

2007-ம் ஆண்டில் இருந்து அகில இந்திய அளவிலான மருத்துவ இடங்களில் ஓ.பி.சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை - தி.மு.க இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடங்கிவைத்த இந்த சமூக அநீதி இன்று வரை தொடர்வது தற்போது தெரியவந்திருப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை உடனடியாக சரி செய்து இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதுதானே தற்போதைய மத்திய அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும்? - பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோராக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதிலும் மத்திய அரசு காட்டுவது அவசியமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 'சமூக நீதி காத்த வீராங்கனை' புரட்சித்தலைவி அம்மா உருவாக்கி, கட்டிக்‍ காப்பாற்றித் தந்திருக்கிற 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தமிழகம் வழங்குகிற அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் பழனிசாமி அரசு உறுதியாக இருக்க வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய அளவிலான மருத்துவப்படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டிய 2007-ம் ஆண்டிலிருந்து 2014 வரை, மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம், அதனை மறந்திருந்த தி.மு.க.வுக்கு, அவர்களது வழக்கப்படி அதிகாரத்தில் இல்லாத போதுதான் பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி திடீரென அக்கறை பிறந்திருக்கிறது - இது உண்மையான அக்கறை என்றால், கூட்டணிக்கட்சிகளைக் கூட்டிவைத்து வெற்றுத்தீர்மானம் போடுவதைத் தவிர்த்து, இத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாவத்திற்கு திரு.மு.க.ஸ்டாலின் உரிய பரிகாரம் தேட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00