அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் மோசடி - போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

May 31 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.ஏ.எஸ். அதிகாரி என பொய் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் புளிக்கார தெருவைச் சேர்ந்த டெய்சி - ஜேசுஉடையான் தனராஜ் தம்பதி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், தங்களது மருமகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக, சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் பிலிப் என்பவரை அணுகியுள்ளனர். இவர் தனக்குத் தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மூலம், வேலை வாங்கித் தருவதாக, அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தனது மருமகள் உள்பட 3 பேரின் வேலைக்காக, டெய்சி 15 லட்சம் ரூபாய் பணம் தர ஒப்புக் கொண்டுள்ளார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, டெய்சி ஜார்ஜ் பிலிப்பிடம் பணத்தை தந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, "நாவப்பன்" என்பவரை ஐ.ஏ.எஸ்.அதிகாரி என அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை தராமல் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெய்சி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இவருக்கும், பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00