மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்து - பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்

Jun 1 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் சுமார் இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது. முதல்கட்டமாக நாள்தோறும் 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் விழுப்புரம்-மதுரை, திருச்சி-நாகர்கோவில், கோவை - காட்பாடி உட்பட 4 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் திருச்சி, மதுரை ரயில் நிலையங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஏற்கெனவே அந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். வரும் 30-ந் தேதிவரையிலான பயணத்திற்கு சுமார் 26 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். உறுதி செய்யப்பட்ட மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பயணிக்கும் ரயில் நிலைய நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00