தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஏளிய மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

Jun 2 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஏளிய மக்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் ​பொருட்கள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் மடிப்பாக்கம் S.ராஜேந்திரன் ஏற்பாட்டில், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திரு. கார்த்திக் தலைமையில், சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாராயணபுரத்தில் வசிக்கும் 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் ‍பொருட்களை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம.கரிகாலன் வழங்கினார். இதில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. அழகு சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. M. கோதண்டபாணி ஆலோசனைப்படி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் A.சதீஷ் குமார் தலைமையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் திரு. M.ஆனந்த் ஏற்பாட்டில், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியைச் சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் தங்க‌ளை இணைத்துக் கொண்டனர். இதில், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி கழக செயலாளர் திரு. V.அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஏழை எளியோருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் முக கவசம் உள்ளிட்டவற்றை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. E.ஜீவானந்தம் வழங்கினார். இதில், கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் குட்வில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி வீ.திலகவதி தலைமையில், நாமக்கல் புறநகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரிசி மற்றும் காய்கறிகளை, மாவட்ட பொருளாளர் திரு. பி.அன்புச்செழியன், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. ஆர்.ரகு உள்ளிட்டோர் வழங்கினர்.

விருதுநகர் கிழக்கு மாவட்டம், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், முத்துலிங்காபுரம் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு, அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய கழகச் செயலாளர் P.R.C. ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மத்திய மாவட்ட கழகம், சாத்தூர் நகர கழகம் சார்பில், சாத்தூரில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பை, மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.ஜி.சாமிகளை வழங்கினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் திரு. ராமராஜ் ஏற்பாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கொந்தரயன்குளம் பகுதியில், 115 பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி பையினை, மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.காளிமுத்து வழங்கினார். இதில், நகரச் செயலாளர்கள் திருமதி. காமாட்சி, செல்வகணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு. மாரிமுத்து, கழகத்தில் இணைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர பகுதியில் உள்ள அட்சக தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்‍கு உதவும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில், கழக அமைப்பு செயலாளர் திரு. கோபால், மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பாக, கடலூர் வண்ணாரபாளையத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி, முகக்கவசம், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலூர் நகர கழக செயலாளர் திரு.வி.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு.ஏ.முருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட அமமுக சார்பில், கல்லல் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை ஏளிய மக்களுக்கு, அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. கல்லல் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் திரு.நா.பழனியப்பன் ஏற்பாட்டில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் தேர்போகி திரு.வே.பாண்டி ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். இதில், கல்லல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆலம்பட்டு திரு.அசோகன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோவை கிழக்கு மாவட்ட அமமுக சார்பில், அரிசிபாளையம் பகுதிக்குட்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு மாஸ்க், கையுறை மற்றும் அத்தியவாசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மா.பா. ரோகிணி கிருஷ்ணகுமார், ஏழை-எளிய மக்களுக்கு காய்கறிகளை வழங்கினார். இதில், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டக்‍ கழகம் சார்பில் திமிரி அருகே உள்ள துர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மகமதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை ராணிப்பேட்டை மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், மாவட்ட செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு. என்.ஜி பார்த்திபன் மற்றும் கழக நிர்வாகிகள் வழங்கினர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் நசரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் திரு. கு.காளிதாஸ் தலைமையில் கண்டோன்மெண்ட் நகர துணைச் செயலாளர் திரு. B.P. நாகேந்திரா, கண்டோன்மெண்ட் நகரக் கழகச் செயலாளர் திரு. கே. மதியழகன் ஏற்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை, காய்கறிகள் வழங்கப்பட்டன. இதனை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம. கரிகாலன் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் திரு. பால் விக்டர், ஒன்றாவது வட்ட கழக செயலாளர் திரு. பன்னீர் பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00