பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது தொடர்பாக, 'ஆன்லைனில்' வழிகாட்டுதல் வழங்கப்படும்' - சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு

Jun 2 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது தொடர்பாக, 'ஆன்லைனில்' வழிகாட்டுதல் வழங்கப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை, ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய அளவில், பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் வழங்க, சென்னை ஐ.ஐ.டி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 400 புதிய படிப்புகளை ஆன்லைனில் நடத்த உள்ளது. இதில், சேர்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும், www.onlinecourses.nptel.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது குறித்து, அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதில், சென்னை ஐ.ஐ.டி.,யின் மூத்த பேராசிரியர்கள் பங்கேற்று, குறிப்புகள் வழங்குவர். இதற்கும், சென்னை, ஐ.ஐ.டி.யின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00