10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் தேவையான வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் - கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை அறிவுறுத்தல்

Jun 2 2020 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

10-ம் வகுப்பு தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் படித்த பள்ளிகளியே தேர்வு நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக உள்ளதா? என தேர்வு மைய ஆசிரியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதா? சானிடைசர், தண்ணீர் போன்ற தேவையான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 825 மையங்கள் முதன்மை மையங்களாகவும், தேர்வு மையங்களாக அமைக்கப்பட்ட பள்ளிகள் துணை மையங்களாகவும் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00