உயர் வகுப்பினருக்‍கு 10 சதவீத இடஒதுக்‍கீடு வழங்குவது குறித்த வழக்‍கு - மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு

Jun 30 2020 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க, மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள், இந்த இட ஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற, தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு-கேரளா-புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளாகதவும், இந்த விவகாரத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00