தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - சென்‌னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் இடமாற்றம்

Jul 1 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெருநகர சென்னை காவல் ஆணையராக இருந்த திரு.ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, திரு. ம‍கேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை காவல் ஆணையராக இருந்த திரு. ஏ.கே. விஸ்வநாதன், காவல் துறை செயலாக்க ஏ.டி.ஜி.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், அவருக்கு பதிலாக, திரு. மகேஷ்குமார் அகர்வால், பெருநகர சென்னை காவல் புதிய ஆணையராக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஐ.ஜி.,யாக இருந்த திரு. அமல்ராஜ் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜி.,யாக, திரு. ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, திரு. பிரேமானந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த திரு. வரதராஜூ மாற்றப்பட்டு, புதிய ஆணையராக, தஞ்சை டி.ஐ.ஜி., திரு. லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை துணை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணன், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர காவல் ஆணையராக, திரு. ஜி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஜ.ஜி.,யாக திரு. ஜெயராம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஏ.டி.ஜி.பி., திரு. ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணியிட மாற்ற நடைமுறை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00