தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் இன்று விசாரணையை தொடங்கியது - சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதிகளுக்கு விசாரணைக் குழு பயணம்

Jul 1 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தந்தை, மகன் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் ஒத்துழைப்பு அளிக்‍கவில்லை என மாஜிஸ்திரேட் திரு. பாரதிதாசன் தெரிவித்த புகாரையடுத்து, அந்த காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் போலீசாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் திரு.அனில்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சிபிசிஐடி ஐ.ஜி. திரு.சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உட்பட 9 மாவட்டங்களை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். முன்னதாக அவர்கள் அனைவரும் இன்று காலை தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இதுகுறித்து ஆலோசித்தனர். சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளை சிறை மற்றும் உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00