கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும்

Jul 11 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்‍கிழமையன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்‍கிழமையான நாளை, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாளையும், அதனைத் தொடர்ந்து, வரும் 19, 26 ஆகிய ஞாயிற்றுக்‍கிழமைகளிலும் எவ்விதத் தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்‍கும். இந்த முழு ஊரடங்கின் போது, மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும். எனவே, மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00