மண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி இளம் பெண் விஞ்ஞானி சாதனை

Jul 23 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த கூடப்பாக்‍கத்தைச் சேர்ந்த வெங்கடபதி என்ற விவசாயி ஏற்கெனவே பயிர் சாகுபடியில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற சிறப்புக்‍குரியவர். அவரது மகள் லட்சுமியும் தந்தை வழியில் பயணித்து வேளாண் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறார். கொய்யாவில் பல்வேறு ரகங்களை கண்டுபிடித்தும், அதைக்‍ கொண்டு பலவிதமான உணவு வகைகளை செய்து காண்பித்தும் ஏற்கெனவே சாதித்த லட்சுமி, மண்ணையே உரமாக்‍கும் மற்றொரு தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நிலத்தின் மேலிருக்‍கும் மண்ணையும், 4 அடிக்‍கு கீழே இருக்‍கும் மண்ணையும் கொண்டு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்‍கியுள்ளார். இதன்மூலம் பயிர்கள் நோய்த் தாக்‍குதல் இல்லாமல் அதிக மகசூலை அளிக்‍கும் என்பதையும் அவர் நிரூபித்துக்‍ காட்டியுள்ளார்.

இந்த உன்னத தொழில்நுட்பத்தை அங்கீகரித்துள்ள ஆந்திர அரசு அங்குள்ள விவசாயி ஒருவருக்கு அதற்கான காப்புரிமையையும் வழங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00