கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 1 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடலூர் நகர பகுதிகளிலும் திட்டக்குடி வாகையூர், ராமநத்தம், ஆவினங்குடி, பெண்ணாடம், முருகன்குடி ஆகிய பகுதிகளிலும் நேற்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில் நேற்று மாலை வானம் கரு மேகங்கள் சூழ காணப்பட்டது. அதனை தொடர்ந்து மணிகண்டம், புங்கனூர், மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், உறையூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், நான்கு ரோடு, குன்னம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, அம்மாபாளையம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்காநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சாகுபடி காலத்தில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வாலஜாநகரம், ஓட்டக்கோவில், தவுத்தாய்குளம், இராயம்புரம், குரும்பஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதேபோல் உடையார்பாளையம், திருமானூர் மற்றும் செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00