சக மனிதர்களின் நல்வாழ்வுக்குத் தியாகமும், தர்மமும் செய்திடல் வேண்டும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பக்‍ரீத் நல்வாழ்த்து

Aug 1 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத வேற்றுமைகளை மறந்து, அனைவரும், ஒற்றுமையோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், வாழ்ந்திட பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் தினத்தை ஒட்டி திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இறை நம்பிக்கையுடையவர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்திடுவார்கள் - அவர்களின் தியாகம் இந்த உலகம் உள்ளவரை கொண்டாடப்படும் என்பதற்குச் சாட்சியாக திகழ்வது பக்ரீத் பண்டிகை எனக் குறிப்பிட்டுள்ள திரு.டிடிவி தினகரன், இறை தூதர் இப்ராகிமைப் போல இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடும், ஆத்மார்த்தமான அன்போடும் தியாகங்களைச் செய்வோர், எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும், வலிமையும், மற்ற எல்லாவற்றையும் விட பெரியது எனவும், அதனை மனதில் கொண்டு இந்த நன்னாளில், "பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும், எளியவர்களிடம் கருணையும் காட்ட வேண்டும்" என்ற நபிகள் பெருமகனாரின் மொழியின் படி ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம் எனவும், திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழலிலும் மனித நேயம் மாறாமல் நடந்துகொள்வோம் எனவும், மனித சமுதாயத்தின் மலர்ச்சிக்கும், சக மனிதர்களின் நல்வாழ்வுக்கும், அவரவர் அளவில் இயன்ற தியாகத்தையும், தர்மத்தையும் செய்து, சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும், திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00