கொரோனா காலத்திலும் முழு கல்வி கட்டணத்தை வசூலிக்‍கும் தனியார் பள்ளிகள் - உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்‍கை

Aug 1 2020 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
தனியார் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டிற்கான முழு கட்டணத்தையும் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறபிக்‍கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 75 சதவீதக் கட்டணத்தை மூன்று தவணைகளாகவும், 25 சதவீதக் கட்டணத்தை பள்ளி திறக்கப்படும்போதும் வசூலிக்கலாம் என தமிழக அரசு பதில் அளித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அதில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு கட்டணத்தின் அடிப்படையில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணத்த்தில் 40 சதவீத தொகையை இம்மாதம் 31-க்குள் வசூலித்து கொள்ளலாம் எனவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதி, பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். எந்தெந்த பள்ளிகள் முழு கட்டணம் வசூலிக்கிறது என வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00