காவிரியாற்றங்கரையில் ஆடிப்பெருக்‍கு கொண்டாட்டத்துக்கு தடை - வீடுகளில் இருந்தபடியே வழிபாடு நடத்த பெண்கள் முடிவு

Aug 1 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆடிப்பெருக்‍கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா ஊரடங்கால் காவிரியாற்றில் மக்‍கள் கூட தடை விதிக்‍கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் பெருக்‍கெடுத்துள்ள இச்சூழலில், ஆற்றங்கரையில் வழிபாடு நடத்த முடியாமல் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாட வேண்டியிருப்பதாக பெண்கள் வேதனையுடன் தெரிவிக்‍கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்‍கம். காவிரித்தாய்க்‍கு நன்றி செலுத்தும் வகையில், புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி, பொங்கிவரும் காவிரிபோன்று தங்களது வாழ்வும் பெருகவும், காவிரிபெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் பெருகவும் வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலிமாற்றிக்கொள்வர். ஆடி 18ம் நாளான நாளை, ஆடிப்பெருக்‍கு கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, காவிரியாற்றிலும், நீர்நிலைகளிலும் மக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இதனால் அம்மா மண்டபம், காவிரியாற்றங்கரையில் பெண்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஆடிப்பெருக்கையொட்டி காவிரியாற்றின் கரையோரங்களில் பொதுமக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்படுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.த.அன்பழகன் அறிவித்துள்ளார். இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கும்பகோணத்திலும், காவிரியாற்றங்கரையில் பொதுமக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்‍கை கொண்டாட பெண்கள் தயாராகி வருகின்றனர். காவிரி அன்னைக்‍கு படைப்பதற்காக மஞ்சள், குங்குமம், மங்கல்ய நாண், பூ மற்றும் பழங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாளை ஆடிப்பெருக்‍கை முன்னிட்டு, நாமக்‍கல் மாவட்டத்தில் ஆற்றில் குளிப்பதற்கும், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00