தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் - நீர்நிலைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலேயே பூஜைகளில் ஈடுபடும் பொதுமக்கள்

Aug 2 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆடிப்பெருக்‍கு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் காவிரியாற்றில் மக்‍கள் கூட தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்‍கம். காவிரித்தாய்க்‍கு நன்றி செலுத்தும் வகையில், புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி, வழிபாடு செய்து பெரியோரிடம் ஆசி பெறுவார்கள். ஆடி 18ம் நாளான இன்று, ஆடிப்பெருக்‍கு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, காவிரியாற்றிலும், நீர்நிலைகளிலும் மக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

காவிரி பெருக்கெடுத்து பாயும் கரூர் மாவட்டத்தின் ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்படுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்திலும், காவிரியாற்றங்கரையில் பொதுமக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்‍கை கொண்டாட பெண்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடிப்பெருக்‍கை முன்னிட்டு, நாமக்‍கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00