கடலூர் அருகே மீனவர்கள் மோதல் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பதற்றம் நீடிப்பு - கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனி காவல் படைகள் அமைப்பு

Aug 2 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூரை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாழங்குடா மீனவ கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலில் மீனவர் ஒருவர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும 10 வீடுகள், ஆம்னி வேன், கார், இருசக்கர வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுவதால் விழுப்புரம் சரக டிஐஜி திரு. எழிலரசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீ அபிநவ் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சம்பவ பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00