கன்னியாகுமரி அருகே மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மண் திட்டுகளை அகற்றாததால் பலியாகி வரும் மீனவர்கள் - உயிருக்கு போராடுவோரை காப்பாற்றுவதில் கடலோர காவல்படை அலட்சியம் காட்டுவதாக மீனவர்கள் வேதனை

Aug 2 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தில் குவிந்துள்ள மண் திட்டு காரணமாக இதுவரை சுமார் 20 மீனவர்கள் உயிரிழந்திருப்பதால் அதனை அகற்றுவதில் அரசு அலட்சியம் காட்டுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேங்காய் பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் முக துவாரத்தில் குவிந்து உள்ள மண் திட்டுகளை அரசு தரப்பில் அகற்றாத்தல் அதில் படகுகள் அடிக்‍கடி மோதுகின்றன. மேலும் கடல் சிற்றத்தால் படகுகள் கரை வந்து சேர முடியாத நிலையும் உள்ளது. இதுபோன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகளில் சிக்‍கி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 20 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்திலும் இதுபோன்று 2 மீனவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே கடந்த வாரம் உயிரிழந்த மீனவர்கள் கடலில் தத்தளிக்‍கும் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.

கடலோர காவல் படைக்கு மீட்பு படகுகள் இருந்தும் கூட அவர்கள் மீனவர்களை காப்பாற்ற வராதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டுகளை முன் வைத்து உள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் பலியாகி வருவதை தடுக்க முன் வராத தமிழக அரசையும், மீன் வளத்துறையையும் கண்டித்து தேங்காய் பட்டிணத்தில் விசை படகுகளில் கருப்பு கொடிகள் கட்டி மீனவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00