ஊரடங்கால் களிமண் பொம்மை தயாரிப்பு தொழில் பாதிப்பு : பொதுப்போக்குவரத்திற்கு தளர்வுகள் அளிக்கக் கோரிக்கை

Aug 2 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள களிமண் பொம்மை தயாரிப்பு தொழிலை மீட்டெடுக்க, பொதுப் போக்குவரத்தை இயக்க அனுமதித்து, தளர்வுகள் அளிக்க வேண்டுமென, அரசுக்கு, களிமண் பொம்மை தயாரிப்பாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை விளாச்சேரியில் தயாரிக்கப்படும் களிமண் பொம்மைகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்களை மட்டுமே நம்பி, பொம்மை தயாரிப்பில், உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக வேலையின்றி தவித்து வந்த பொம்மை தயாரிப்பாளர்கள், ஜூலை மாதத்துடன் ஊரடங்கு முடிவுற்று, போக்குவரத்து தொடங்கப்பட்டுவிடும் என எண்ணி, விநாயகர் சதுர்த்திக்காக வங்கியில் கடன் பெற்று, சிலை தயாரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதுடன், பொதுப்போக்குவரத்துக்கான தடையையும் நீட்டித்ததால், தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தேங்கிக் கிடப்பதாகவும், எனவே பொதுப்போக்குவரத்திற்கு தளர்வுகள் விதித்து அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுப்போக்குவரத்திற்கு சில தளர்வுகளை அறிவிக்கும் பட்சத்தில், தேங்கிக் கிடக்கும் பொம்மைகளை விற்பனை செய்து, அசலையாவது மீட்டெடுக்க முடியும் என்பது, பொம்மை தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00