தீரன் சின்னமலை நினைவு தினத்தை யொட்டி ஈரோடு மணிமண்டபத்தில் அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை - சென்னையிலும் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்

Aug 2 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்று அவரது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஜி செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி. சி. ஆர். சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு. எஸ்.முருகன், வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சுகுமார் பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவப் படத்திற்கும் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணி மண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு கழக நெசவாளர் அணி செயலாளர் திரு.ஏ.சண்முகம், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.D.தங்கராஜ், மாநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.சக்தி என்கிற சிவஷண்முகம், புறநகர் மாவட்டக்கழக செயலாளர் திரு.எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00