சென்னையில் 2 சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை : 3,403 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்

Aug 9 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் உள்ள இரண்டு சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 3 ஆயிரத்து 403 கொரோனா நோயாளிகள், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலிகிராமத்தில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மையத்தில் 3 ஆயிரத்து 237 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில், 2 ஆயிரத்து 772 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது 321 ஆண்கள், 144 பெண்கள் உட்பட 465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 837 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் 631 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 144 ஆண்கள், 62 பெண்கள் என 206 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00