ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் கார்-வேன் ஓட்டுநர்கள் - குடும்பச்சூழலை எதிர்கொள்ள மாற்று வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்

Aug 10 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில், தொடர் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வந்த கார்-வேன் ஓட்டுநர்கள், குடும்ப சூழலை எதிர்கொள்ள, ஒட்டுநர் தொழிலுக்கு சற்றும் தொடர்பில்லாத மாற்று தொழில்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, வெளியூர்களுக்கு வாகனங்கள் செல்ல, அரசு தடை விதித்தது. பொதுமுடக்கம் 4 மாதங்களுக்கு மேலாக தொடர்வதால், வெளிமாவட்டம் செல்ல முடியாமல், கார்-வேன் ஒட்டுநர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கால் வேலைவாய்ப்பு பறிபோனதால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருவதாக, கார்-வேன் ஓட்டுநர்கள், வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள, தங்களுக்கு தெரியாத தொழில்களான காரில் உணவகம் நடத்துவது, காரில் முகக்கவசம் விற்பது, சரக்கு ஆட்டோவில் பழங்கள் விற்பது, சாலையோரங்களில் காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது என தொழில் அமைத்து, இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்திலும், வங்கிக் கடன், இன்சூரன்ஸ் தொகை, சாலைவரி உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் தங்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கும் அவர்கள், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, மண்டலங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00