தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

Aug 10 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 100 சதவீத மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின.

தேர்வுக்கு விண்ணப்பித்த 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4 லட்சத்து 66 ஆயிரத்து 70 பேர் மாணவிகள். 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர் மாணவர்கள் ஆவர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால், வரும் 17ம் தேதி முதல் 25ம் தேதிவரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00