பெரியகுளத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாததால் பொதுமக்கள் அவதி : குடும்ப அட்டைகளை திரும்ப வழங்கப்போவதாக அறிவிப்பு

Aug 14 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 2 வருடங்களாக கூட்டுக்‍ குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாததால் குடிநீர் பஞ்சத்தில் வாடுவதாகக்‍ கூறி குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்‍கப் போவதாக கிராம மக்‍கள் முடிவெடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஏற்பட்ட கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அதற்கான கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்தன. பெயரளவில் பணிகள் நிறைவடைந்தாலும் இரண்டு ஆண்டுகளாக அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை என்றும், ஊராட்சி நிர்வாகத்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்வதாகவும் கிராம மக்‍கள் தெரிவிக்‍கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் செவிசாய்க்காததால் குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00