நாட்டின் 74-வது சுதந்திர தினம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக்கொடியை தலைமை நீதிபதி ஏற்றி வைத்தார்

Aug 15 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி திரு.ஏ.பி.சாஹி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தலைமை நீதிபதி திரு.ஏ.பி.சாஹி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சி.ஐ.எஸ்.எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், உயர்நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

சென்னை பெரம்பூரில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ், தேசிய கொடியை ஏற்றி வைத்து ரயில்வே காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை எல்.ஐ.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் திரு.கதிரேசன், மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநகரத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00