தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபிடிப்பு

Aug 30 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மேலூரில் அரசுப் பள்ளியில் பயிலும் இரட்டை சகோதர மாணவர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இரட்டை சகோதர மாணவர்களான திரு.பாலச்சந்தர் மற்றும் திரு.பாலகுமார் ஆகியோர் மேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்கள் சிறு வயதாக இருந்தபோதே விபத்தில் தந்தையை இழந்து தாய் திருமதி கலைவாணி அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் சிறு வயது முதலே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளில் பலகண்டுப்பிடிப்புகளை முன்வைத்து பரிசுகளை பெற்று உள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் பாலசந்தர் மற்றும் பாலகுமார் ஒன்றாக இணைந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் விரைந்து செல்வதற்கும், அவசர கால வாகனங்கள் வருவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கும் வகையிலும் புதிய தொழில் நுட்பக் கருவியை கண்டுப்பிடித்து அசத்தியுள்ளார்.

இக்கருவி ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ் கருவியுடன் இணைக்கப்பட்டு, வாகனம் புறப்படும் போது கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுந்தகவல் வந்துவிடும். ஆம்புலன்ஸ் புறப்பட்ட உடன் சர்க்யூட் தானாக இயங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சாலைகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் ஆம்புலன்ஸ் வருவது குறித்து குரல் ஓசையாக "ஆம்புலன்ஸ் வருகின்றது வழிவிடுங்கள்" என்ற எச்சரிக்கை அறிவிப்பு செய்வதோடு அதில் பொருத்தப்பட்டுள்ள ஊதா நிறத்திலான விளக்கு ஒளிரும் வகையில் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் குறிப்பிட்ட ஒலிபெருக்கி சென்சாரை கடந்தவுடன், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த ஒலி பெருக்கி இணைப்பு துண்டிக்கப்பட்டு அடுத்த ஒலிபெருக்கியை இயக்கும் வகையில் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00