தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 14 ஆயிரத்தைத் தாண்டியது - மேலும் 5,697 பேருக்‍கு நோய்த்தொற்று

Sep 15 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 735 பேர் குணமடைந்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று 5 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 68 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 502-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 989 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 572 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 735 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 பேர் குணமடைந்தனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை - 485, செங்கல்பட்டு - 324, சேலம் - 292, திருவள்ளூரில் 283 பேருக்‍கு கொ​ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் - 268, திருப்பூர் - 262, காஞ்சிபுரம் - 198, திருவண்ணாமலையில் 189 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00