தவறான கருகலைப்பு சிகிச்சையால் கர்ப்பப்பையை இழந்த இளம்பெண் - திருச்சி அருகே போலி பெண் மருத்துவர் கைது

Sep 16 2020 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
தவறான கருக்‍கலைப்பு சிகிச்சையால் திருமணமாகாத பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்குக்‍ காரணமான, போலி பெண் மருத்துவர் திருச்சி அருகே கைது செய்யப்பட்டார்.

திருச்சியை அடுத்த மண்ணச்சல்லூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதுக்‍காலனியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் ஒரு பெண் மருத்துவரிடம் கடந்த பத்தாண்டுகளாக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள அவர், பின்னர் மண்ணச்சல்லூர் கடைவீதியில் கருக்‍கலைப்பு மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த வாரம், மண்ணச்நல்லூரை அடுத்த சித்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான, திருமணமாகாத பெண் ஒருவருக்‍கு அவர் கருக்‍கலைப்பு சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்‍கப்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றினால்தான் உயிரைக்‍காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரது கர்ப்பப்பையை அகற்றி சிகிச்சை அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் பிரியதர்ஷினி, ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, மண்ணச்சநல்லூர் போலி மருத்துவர் ராஜலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த கருக்‍கலைப்பு மையத்திலிருந்து மருத்துவ உபகரணங்களைக்‍ காவல்துறையினர்‍ கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00