பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாள் விழா : அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Sep 16 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ சிலைக்‍கும், திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

கோவை மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் என்.ஆர்.அப்பாதுரை தலைமையில் கோவை கணபதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் திரு. அப்பாத்துரை, சங்கனூர் பகுதி கழக செயலாளர் திரு.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோவை புற நகர் வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் குரும்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேப்போல், பொள்ளாச்சி நகர கழகம் சார்பில், கோவை ரோட்டில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் வடக்கு மாவட்ட அமமுக சார்பாக விருத்தாசலம் வானொலி திடல் பகுதியிலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், குடிமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில், சோமவாரப்பட்டியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் அமமுக நகர கழகம் சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, கழகநிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆதரவற்ற ஏழை எளியோருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று திருப்பூர் சாலையில் உள்ள காமராஜபுரம் 4-வது வார்டு பகுதியில் வார்டு செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் அமமுக கழகக் கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக புதிய உறுப்பினர்கள் அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர அமமுக சார்பில், செங்கம் சிவன் கோவில் வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கழகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் மாநில கழக செயலாளர் திரு. வேல்முருகன் தலைமையில் கழகக் கொடியினை அமைப்பு செயலாளர் திரு.அருள் ஏற்றிவைத்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ திரு. யூ.சி.ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் அமமுக நகர கழகம் சார்பில், ராமநாதபுரம் மத்திய கொடிமரம் அருகே அமைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கழக அமைப்புச் செயலாளர்கள், நகர, ஒன்றிய கழகச் செயலாளர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், அரிமளம் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவ படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விருதுநகர் கிழக்கு மாவட்டம், காரியாபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் காரியாபட்டி பேரூர் கழகம் சார்பில் காரியாபட்டியில் அலங்கரிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு, கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கே.கே.சிவசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனை தொடர்ந்து விருதுநகர் மேற்கு ஒன்றியம் சார்பில், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 1000 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அந்தியூர் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் பச்சாகவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாமக்கல் வடக்கு மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பாக போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றி அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிங்களாந்தபுரம் ஊராட்சியில் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு கழக துணைத் தலைவரும் நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளருமான நல்லாசிரியர் திரு. எஸ். அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் எஸ். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் தெற்கு மாவட்டம் புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக பாச்சல் ஊராட்சியில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் தெற்கு மாவட்டம் வடக்கு, தெற்கு நகர கழகத்தின் சார்பாக கழக அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூர் மத்திய மாவட்ட அமமுக சார்பாக பண்ருட்டி நான்கு ரோட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பண்ருட்டி நகர கழக செயலாளர் பூக்கடை.பி.சக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்டம் சார்பாக கழக அமைப்புச் செயலாளரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான திரு. கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி சித்தாமூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. திருநாவுக்கரசு ஏற்பாட்டில் அண்ணா திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் திரு. ஏ எஸ் ராஜா தலைமையில் பழைய மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காட்பாடி பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு காட்பாடி ஒன்றிய செயலாளர் திரு. சந்திரகணேசன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்டம் லால்குடி நகரில் அண்ணா பிறந்தநாள் விழா, தியாக தலைவி சின்னம்மா பிறந்த நாள் விழா, கழக கொடியேற்று விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. லால்குடியில பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அண்ணா திருவுருவப்படத்திற்கு, தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளாருமான திரு.ஆர். மனோகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயத்தில் கடைவீதியில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் கிழக்கு மாவட்டம் கழகம் சார்பில் குளித்தலை பேருந்து நிலையம் அருகே அண்ணாவின் திரு உருவப் படத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்ளாபட்டி திரு. எஸ் மணிமாறன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் திடல், குன்னுவாரன்கோட்டை , விராலி பட்டி ஆகிய பகுதிகளில் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் திரு. T. K. செல்வம் தலைமையில் அறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் விருகாவூரில் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அம்மா தொழிற்சங்க பேரவை துணை தலைவர் திரு. சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா​கொண்டாடப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட அமமுக செயலாளர் திரு. துரை. மணிவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்ணா பிறந்தநாள் விழாவை கழக நிர்வாகிகள் கொண்டாடினர்.

திருவள்ளூர் மத்திய மாவட்டம், மாதவரம் தெற்கு பகுதி கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புழலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ​காவாங்கரை பகுதியில் நடைபெற்ற நிக்ழச்சியில், ஏழை-எளிய பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நல உதவிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர். திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். வேதாச்சலம், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. குட்வில் குமார், மாதவரம் தெற்குப் பகுதி கழக செயலாளர் திரு.இ. சுரேஷ்பாபு, உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி நகரக்‍ கழகம் சார்பில், பூந்தமல்லியில் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை, பூந்தமல்லி நகரக்‍ கழகச் செயலாளர் திரு.து.கந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.ஜாகீர் அப்பாஸ், நகர அவைத் தலைவர் திரு.மனோகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.பீர் முகமது, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.சரவணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.சந்திரன், பூந்தமல்லி நகர இணைச் செயலாளர் திரு. பி மணிகண்டன், நகர துணை செயலாளர் ஆர். வி. பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு, அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். ஆம்பூர் நகரக்‍ கழகச் செயலாளர் திரு.ய.சே சமரசன், மாவட்ட அவைத் தலைவர் திரு.என்.பி செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டக் கழக அலுவலகத்தில் உள்ள திருஉருவப் படத்திற்கு, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.பிஎஸ்என் தங்கவேல் மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் இனிப்பு வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் தெற்கு நகரக்‍ கழகம் சார்பில், தெற்கு காந்தி கிராமம் பகுதியிலும், கரூர் மத்திய நகரம் சார்பில் சின்ன ஆண்டான்கோவில் பகுதியிலும், பேரறிஞர் அண்ணாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00