மருத்துவ மேற்படிப்புக்‍கான கலந்தாய்வு தேதியை மேலும் நீட்டிக்‍கக்‍கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Sep 16 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவ மேற்படிப்புக்‍கான கலந்தாய்வு தேதியை மேலும் நீட்டிக்‍கக்‍கோரி தமிழக அரசு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31ம் தேதிக்‍குள் முடிக்‍க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள காலியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி அரவிந்த், கீதாஞ்சலி ஆகிய மருத்துவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்‍காட்டி, தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிக்‍கக்‍கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரோகின்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதியை நீட்டிக்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00