தமிழகத்திலேயே முதல்முறையாக ஆன்லைனில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் - திருவள்ளுவர் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு

Sep 16 2020 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்திலேயே முதல்முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் - மே மாதம் நடைபெற வேண்டிய கல்லூரி பருவத்தேர்வுகள் தாமதமாகின. தற்போது இத்தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்தன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. காட்பாடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 140 உறுப்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். ஆன்லைனில் வினாத்தாள் கிடைக்காத மாணவர்களுக்கு வேறு ஒரு மாணவர் பகிர்வு செய்வதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் சிலர் இப்பல்கலைக்கழகத்திலேயே தேர்வு எழுதுகின்றனர். மற்ற கல்லூரிகளிலும் இணையவசதி பெறமுடியாத மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுக்கே சென்று தேர்வு எழுதுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00