மாணவர்களின் உயிரைப் பறிக்‍கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தல்- தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்

Sep 16 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவர்களின் உயிரைப் பறிக்‍கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அம்பேத்கார் சிலை அருகே, மாணவர்களின் தற்கொலைக்குக்‍ காரணமான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை தடுக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - சமஸ்கிருதம் மற்றும் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

ரத்து செய்யகோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில், நீட் தேர்வைக்‍ கண்டித்து, நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறையைச் சேர்ந்தவர்கள், பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் 14 மாணவ மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், உயிர்களைக்‍ பறிக்‍கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மார்க்கெட் பகுதியில், மாணவரை பிணமாக சித்தரித்து ஊர்வலமாக தூக்கி வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00