திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி 3 கோடி மதிப்பிலான வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : கொள்ளையர்கள் 6 பேரை ஆந்திரா அருகே மடக்கி பிடித்தது தனிப்படை போலீஸ்

Sep 17 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை, ஆந்திரா அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி, இவரது வைர மோதிரத்தை, 3 தினங்களுக்கு முன் கொள்ளை கும்பல் ஒன்று, வழிப்பறி செய்தது. இச்சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைக் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையில் கொள்ளைக் கும்பல் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சித்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளைக் கும்பலிடம் இருந்து வைர மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை சித்தூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00