சென்னை ராயபுரம் அருகே காணாமல் போன இரண்டரை வயது குழந்தை - 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

Sep 17 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராயபுரம் பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் பப்லு என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேற்குவங்கத்தை சேர்ந்த இவருக்கு மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த 6ம் தேதி பப்லு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அசாமை சேர்ந்த 25 வயது மதிக்கதக்க நபர் பப்லுக்கு அறிமுகமாகியுள்ளார். அவரை பப்லு தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மறுநாள் பப்லுவின் இரண்டரை வயது மகள் மர்ஜினாவை அந்த நபர் வெளியே அழைத்து சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வராததால் குழந்தையை தேடிய பெற்றோர். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். செல்போனை வைத்து குழந்தையை கடத்திய நபரை கண்டு பிடித்தனர். அவர் நாவலூர் பகுதியில் தங்கி இருப்பதும், அங்கு குழந்தையை வைத்திருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 10 நாட்களாக பிரிந்திருந்த குழந்தையை கண்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், கடத்தப்பட்ட நபர் பிடிபடாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00