ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் - பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தை வந்தடைந்தது

Sep 21 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்திய மூர்த்தி நீர் தேக்கத்திற்கு இன்று காலை வந்து சேர்ந்தது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த 18-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி திறந்து விடப்பட்டது. பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த தண்ணீர், கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக தமிழக எல்லைப் பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு நேற்றிரவு வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூண்டி சத்திய மூர்த்தி நீர்தேக்கத்திற்கு இன்று காலை விநாடிக்கு 200 கனஅடி நீர் வந்துசேர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00