வேலூர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகர் - காவல்துறை, வருவாய்த்துறை கண்டுகொள்ளவில்லை என புகார்

Sep 21 2020 8:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, மணல் திருட்டில் ஈடுபடும் தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

விண்ணம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில், திமுக பிரமுகர், ​நாளொன்றுக்‍கு 10 யூனிட் மணல் எடுத்து டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறைக்‍கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயா தொலைக்‍காட்சி செய்தியாளர் செய்தி சேகரித்தபோது, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குவித்து வைக்‍கப்பட்டிருந்த 6 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டை தட்டிக்‍கேட்ட சோளிங்கர் மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.பாபுக்கு, தி.மு.க பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00