உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை

Sep 24 2020 7:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு தொடர்ந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் தொடர்பான வழக்‍கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்‍கல்வித்துறை நேற்று அறிக்‍கை தாக்‍கல் செய்தது. அதில், 111 புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், 9 பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்தித்ததாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அப்போது, 100 சதவீத கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தித்த 9 பள்ளிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. 9 பள்ளிகளும் அக்டோபர் மாதம் 14ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்‍ கட்டணத்தில் முதல் தவணையான 40 சதவீத கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை வரும் 30-ம் தேதிக்‍கு மேல் நீட்டிக்க போவதில்லை என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க மெயில் ஐடி உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00