தமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு

Sep 24 2020 7:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு பிறப்பிக்‍க உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், கடந்த 2017-ம் ஆண்டு குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்கு எடுத்து வந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு, சட்டமன்ற உரிமைக்‍குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளதாகவும், அனுமதி பெறாமல் காண்பிக்கப்பட்டதா? என்பதை முந்தைய நோட்டீசில் உரிமை குழு குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், முந்தைய நோட்டீசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்த உடனேயே இரண்டாவது முறையாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00