தமிழர்களை கொன்று குவித்த நாளை மகிழ்ச்சியான நாள் என்று தான் குறிப்பிட்டதாக திரித்து கூறப்படுகிறது - 800 திரைப்படம் தொடர்பான சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்

Oct 16 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
இனப்படுகொலை தொடர்பான தனது கருத்துகள் திரித்துக் கூறப்படுவதாக, முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. 800 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கும், சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், 800 திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து திரு.முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009-ம் ஆண்டுதான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று தான் கூறியதை, தமிழர்களை கொன்றுகுவித்த நாள்தான் தனக்கு மகிழ்ச்சியான நாள் என கூறியதாக திரித்து எழுதுவதாக தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்ததையே மகிழ்ச்சியான நாள் என்று தான் கூறியாதாகவும், அப்பாவி மக்களின் படுகொலைகளை தான் ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்களர்களையும், மலையக தமிழர்களையும், ஈழத்தமிழர்களையும் ஒன்றாகவே பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கை அணியில் விளையாடி சாதனை படைத்ததாலேயே, தன் மீது தவறான பார்வை இருப்பதாகவும், இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணியில் சேர முயற்சித்திருப்பேன், இலங்கை தமிழனாக பிறந்தது தவறா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணங்களாலும் தன்னை தமிழினத்திற்கு எதிராக சித்தரிப்பது வேதனையளிப்பதாகவும் திரு.முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00