மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : தேசிய அளவில் ஒடிசா மாநில மாணவன் முதலிடம் - மாநில அளவில் திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சாதனை

Oct 17 2020 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சோயப் அஃப்டாப், 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து, தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழக அளவில், திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், முதல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் NTANEET.NIC.IN என்ற இணையதள முகவரியில், நேற்று வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முடிவுகளை பதிவிறக்கம் செய்ததால், இணையதள சர்வர் பல மணி நேரம் முடங்கியது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அஃப்டாப் என்ற 18 வயது மாணவர், நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து, தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தில் படித்த, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன், 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 8ஆம் இடத்தையும், மாநில அளவில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்துள்ளார்.

அதே பயிற்சி மையத்தில் படித்த, நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி மோகனபிரபா, 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 52ஆவது இடத்தையும், மாநில அளவில் 2ஆவது இடமும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு பிளஸ் டூ முடித்த அவர், நீட் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00