உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவால் திடீர் பரபரப்பு - தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை

Oct 28 2020 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கி, தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் சீனு ராசாமி. இவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அரசு தனக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கிரிக்கெட் வீரர் முரளிதரன் தொடர்பான 800 படத்தில் நடிக்க வேண்டாமென விஜய் சேதுபதியை தான் கேட்டுக்கொண்டுதாகவும், அவரது நலன் கருதியே இதனை தெரிவித்ததாக கூறினார். ஆனால் அதன் பிறகு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக தெரிவித்தார். சினிமாவில் தனக்கு அரசியல் பற்றி பேச தெரியும் என்றும், ஆனால் திரைத்துறையில் உள்ள அரசியல் தனக்கு தெரியாது என்றும் சீனு ராமசாமி அப்போது குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00