பசும்பொன்னில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் திருமகனார் குரு பூஜை விழா - டிடிவி தினகரன் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்

Oct 28 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பசும்பொன் தேவர் திருமகனார் குரு பூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில், வரும் 30-ம் தேதி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகப் போற்றி, மக்களையும் மண்ணையும் நேசித்த மாபெரும் தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 58-வது குருபூஜை வரும் 30-ம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 11 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மரியாதை செலுத்த உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00