போலி உர விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Nov 20 2020 9:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் போலி உர விற்பனை நடைபெறுவதாக எழுந்துள்ள புகார் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து, பழனிசாமி அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பதிவிட்டுள்ளார். இத்தகைய உரவிற்பனையில் ஈடுபட்டுள்ளோரை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினரே காப்பாற்ற முயலுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

போலி உரத்தினை பயன்படுத்தியதால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள திரு.டிடிவி தினகரன், தமிழகத்தில் போலி உர விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00