தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை - அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Nov 20 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் திரு. பன்வாரிலால் பு‍ரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

‌தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, த‌டையை மீறி விளையாடுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணையதள விளையாட்டுக‌ளை நடத்தும் நிறுவனப் ‍பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மற்றும் தண்டிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00