அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍ கூட்டம் - மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அ.ம.மு.க.வில் இணைந்தனர்

Nov 21 2020 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. மேலும், மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர், அக்‍கட்சிகளிலிருந்து விலகி தங்களை, அ.ம.மு.க.வில் இணைத்துக்‍ கொண்டனர்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. E. லக்ஷ்மிநாராயணன் தலைமையில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.கே.நகரில் நடைபெற்றது. இதில், வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கழக அமைப்புச் செயலாளர் திரு. நேதாஜி கணேசன், பகுதி செயலாளர் திரு. B. வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. பரிமளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மறைந்த கழகப் பொருளாளரும் முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி. வெற்றிவேல் திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட V.பெரியபட்டி ஊராட்சி மட்டப்பாறைப் பட்டியில், தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாள் விழா மற்றும் கழக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொருளாளர் திரு. நாசர் முகமது, ஒன்றிய கழகச் செயலாளர்கள் துளசி.சேகரன், செங்குட்டுவன், செந்தமிழ் செல்வன், சிங்காரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எல்.எண்டத்தூரில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சி.முனுசாமி முன்னிலையில், திமுகவிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள கயத்தாறு பகுதியில், கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா முன்னிலையில், 50 இஸ்லாமிய இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது, கயத்தார் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. K. கணபதி பாண்டியன், கயத்தார் பேரூர் கழக செயலாளர் திரு. K சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00