தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகளின் கருத்துக் கேட்பு : தேர்தல் பணிகளை தொடங்க கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

Dec 1 2020 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கழகத் தேர்தல் அறிக்‍கை தொடர்பான கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டங்கள், அம்மா மக்‍கள் முன்னேற்றக கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகர் வடக்கு தெற்கு மற்றும் புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், கழக தலைமை நிலைய செயலாளரும் மண்டல பொருப்பாளருமான திரு. K.K.உமாதேவன் தலைமையில், ஐராவதநல்லூர் பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. S.V.S.P.மாணிக்கராஜா கழக நிர்வாகிகளிடையே உரையாற்றியபோது தென்மண்டலத்தில் 50 சட்டமன்ற தொகுதிகளை அ.ம.மு.க கைப்பற்றும் வகையில் கழகத்தினர் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வுகூட்டத்தில் கழக தேர்வு பிரிவு செயலாளர் திரு. N.G.பார்த்திபன், கழக அமைப்பு செயலாளர்கள் டாக்‍டர் இல.கதிர்காமு, திரு.இரா.ஹென்றி தாமஸ், திரு.A.P.பால் கண்ணன், திரு. இ.மகேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு. பரமநாதன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, கழக அம்மாபேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, கழக மகளிரணி செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட கழக செயலாளர்கள் திரு. மா.ஜெயபால், திரு. ஷ.ராஜலிங்கம், திரு.செ.சரவணன், கழக செய்தி தொடர்பாளர் திரு.வீர.வெற்றிப்பாண்டியன் மற்றும் மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00