விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍ கூட்டம்

Dec 1 2020 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் அ.ம.மு.க தேர்தல் அறிக்‍கை தொடர்பான கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில், 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகத்தலைவி சின்னம்மாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாக, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கழகத் தேர்தல் அறிக்‍கை தொடர்பான கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டங்கள், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன்படி, விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், தேர்தல் பணி ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு.எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், கழகம் சார்பில் தயாரிக்கப்பட உள்ள தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இக்‍கூட்டத்தில் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி, 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகத்தலைவி சின்னம்மாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கழக மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர். முத்தையா, கழக அமைப்பு செயலாளர்கள் திரு.கே.எஸ்.கே.பாலமுருகன், திரு.கணபதி, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.பாலசுந்தரம், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.கெளதம் சாகர், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.முத்துக்குமார், கழக செய்தி தொடர்பாளர் திரு.தாம்பரம் நாராயணன், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் திரு.கருணாநிதி, கழக வழக்கறிஞர் இணைச் செயலாளர் திரு.மகேந்திரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.பார்த்திபன், மாவட்ட கழக பொருளாளர் திரு.காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அ.ம.மு.க அலுவலகத்தில், கழகக்‍ கொடியினை ஏற்றி வைத்து, மாண்புமிகு அம்மாவின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00