பல்கலைக்‍கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்‍கால தடை - வழக்‍கு நிலுவையில் உள்ள போது தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? என கேள்வி

Dec 1 2020 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் இரு பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரியர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல் எப்படி முடிவுகளை வெளியிடலாம் என கேள்வி எழுப்பி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகங்கள் வெளியிட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையின் போது, மாணவர்கள் காணொலி காட்சி விசாரணையில் நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதையும், நீதிமன்ற விசாரணையை யூ டியூபில் ஒளிபரப்பியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் நேரடி விசாரணையாக நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00