விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு - திருச்சியில் இருந்து டெல்லி செல்ல முயன்ற அய்யாகண்ணு உட்பட நூற்றுக்‍கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

Dec 3 2020 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு. அய்யாகண்ணு உட்பட நூற்றுக்‍கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைக்‍ கண்டித்தும், விவசாயத்தையும் அழித்தொழிக்‍கும் வகையில் உள்ள இந்தச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்‍கணக்‍கான விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்‍கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு. அய்யாகண்ணு தலைமையில் நூற்றுக்‍கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று டெல்லி செல்ல முயன்றனர். அவர்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00